song

Friday, 8 November 2013

100 கோடியை தாண்டும் ஆரம்பம் வசூல்



தீபாவளி படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இப்போதும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது ஆரம்பம். படம் வெளியான ஒரு வாரத்தில் 50 கோடியை வசூல் செய்துள்ளது ஆரம்பம். சென்னையில் மட்டும் ஒரு வாரத்தில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 30 கோடி வசூலித்தது. வெளிநாடுகளில் 20 கோடி கோடியென மொத்தம் 50 கோடியை தாண்டிவிட்டது.


இரண்டாவது வார இறுதியில் 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50வது நாளுக்குள் 150 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள்.

Thursday, 7 November 2013

VEERAM Teaser

அஜீத்தின் ‘ஆரம்பம்’ 6 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் நாள் விற்பனையிலேயே ஒரு வாரத்திற்குண்டான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.

பல்வேறு எதிர்பார்ப்புகளிடையே வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் வசூலும் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுககு திருப்தியாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்காக பல தியேட்டர்கள் ஏற்கெனவே புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தியேட்டர்களில் மட்டும் ‘ஆரம்பம்’ 2 நாட்களுக்கு வெளியானது.

அதன்பிறகு தீபாவளிக்கு வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பாண்டிய நாடு’ படங்களின் வசூல் திருப்திகரமாக இல்லாததால், அந்த திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டு ‘ஆரம்பம்’ படம் திரையிடப்பட்டது.

‘ஆரம்பம்’ படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ.10.20 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ரிலீஸாகி 6 நாட்கள் ஆகிய நிலையில் ரூ.50 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்துள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாடுகளிலும் ரிலீசான 3 நாட்களில் சுமார் 1.34 கோடி ரூபாயை வசூல் செய்து யு.கே.பாக்ஸ் ஆபீசில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடி ரூபாய். ஆனால் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையிலேயே இந்த தொகையை நெருங்கிவிட்ட ‘ஆரம்பம்’ படத்தின் வசூல் தமிழகத்தின் பல்வேறு ஏரியாக்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களும், ‘ஆரம்பம்’ படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியுடைந்துள்ளனர்.

'Arrambam' Box Office Collection

Ajith's "Arrambam" dominates over new releases in Tamil as well as other languages at the Tamil Nadu box office
"Arrambam" took a fantastic opening upon release on 31 October. According to senior film journalist Sreedhar Pillai, the Ajith starrer raked in approximately 8.75 crore nett (no tax) at the Tamil Nadu box office. The film not only gave Ajith his best ever opening, but also got the best opening of the year as against other big releases in Tamil.
"Arrambam" has reportedly surpassed the first-day collections of 2013's biggest hits (till date) - "Vishwaroopam" and "Singam 2." 

"Vishwaroopam" raked in around 5.81 crore on its first day at the TN box office, whereas "Singam 2" reportedly fetched around 8.15 crore from TN, Kerala and Karnataka areas (combined). However, "Arrambam" has minted approximately 8.75 crore from Tamil Nadu alone, despite releasing on a week day.

Super Hit ads in Magazine



Wednesday, 24 July 2013

Ajith’s 53rd Film Officially Titled As ARRAMBAM



Ajith’s 53rd Film Officially Titled As ARRAMBAM

 

Expectations were skyhigh, anticipation was at its maximum, every move or whimper caused a storm, the media was in a frenzy and had people wait with bated breath, the moment finally arrives with the naming of the latest Ajith movie. Rumour mills and fans alike were churning tons of names and finally the crew unveil the name as “Arrambam”. A simple yet powerful title that isnt glorifying an individual but signifying the theme of the movie. With the stellar cast of Ajith Kumar etc the movie is being produced by……..With the title Aarambam there has been a Shubh Aarambam for more things to come say the crew.
Cast
Ajith
Nayanthara
Arya
Daggupathy Rana
Taapsee
Kishore
Atul Kulkarni
Mahesh Manjrekar
Suma Ranganath
Crew
Subha – Dialogue
Vishnu Vardhan & Subha – Story, Screenplay
Illaiyaraja – Art Director
Lee Whitaker, Kaecha, Tinu Varma & Jagan – Stunt
Dinesh & Shobi paul raj – Choreography
Vishnuvardhan – Director
Pa. Vijay – Lyrics
Om Prakash – Cinematographer
Sreekar Prasad – Editor
Yuvan Shankar Raja – Music Director
Subha & Vishnuvardhan – Writers
_______________________________

அஜீத்குமார் நடித்து, ஏ.எம்.ரத்னம் தயாரித்த படத்துக்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்தது. படம் முடிவடைந்து தணிக்கைக்கு அனுப்பப்படும் நிலையில் அந்த படத்துக்கு, ‘ஆரம்பம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
பெயர் சூட்டப்படாத படம்
பொதுவாக ஒரு புதிய படத்தை தொடங்கும்போது, முதலில் அந்த படத்துக்கு பெயர் சூட்டப்படும். பிறகுதான் படப்பிடிப்பை தொடங்குவார்கள். அஜீத் கதாநாயகனாக நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்த புதிய படத்துக்கு பெயர் சூட்டாமலே படப்பிடிப்பை தொடங்கினார்கள்.
கடந்த வருடம் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மும்பையிலும், துபாயிலும் படம் வளர்ந்தது. கடந்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது. இருப்பினும் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. கதைக்கு பொருத்தமான பெயரை தேர்ந்தெடுப்பதில் அஜீத், டைரக்டர் விஷ்ணுவர்தன், பட அதிபர் ஏ.எம்.ரத்னம் ஆகிய மூவரும் கவனம் செலுத்தினார்கள்.
‘ஆரம்பம்’
படத்தின் பெயரை தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில், அஜீத் நடிக்கும் படத்துக்கு, ‘வலை’ என்றும், ‘தல’ என்றும் பெயர்கள் சூட்டியிருப்பதாக சில கற்பனையான செய்திகள் வெளிவந்தன.
இப்போது இந்த படத்துக்கு, ‘ஆரம்பம்’ என்று பெயர் சூட்டியிருப்பதாக பட அதிபர் ஏ.எம்.ரத்னம் நேற்று ‘தினத்தந்தி’ நிருபரிடம் தெரிவித்தார்.
அஜீத் நடித்து முடித்துள்ள ‘ஆரம்பம்,’ மும்பையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.
நயன்தாரா
இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ஆர்யாவும், டாப்சியும் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
இந்த படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருப்பதாக ஏ.எம்.ரத்னம் கூறினார்.